அதிகாலை உன் அன்புக்குரலில் என் உறக்கம் களைப்பாய்,
போர்வையை நான் விலக்க என் காலின் அருகே கண் முடி உறக்கம் கொள்வாய்,
மாலை நேரம் நான் பள்ளி முடிந்து வீடு திரும்பு வேன்
நீ, வானத்தை நோக்கி கை இரண்டை உயர தூக்கி,
கால் இரண்டை சுவரில் சாய்த்து, ஓர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாய்
உன் உறக்கம் கலைப்பேன் , என்னுடன் சிணுங்கிச் சீராடி செல்வாய்;
சற்று நேரத்தில் என் மடியில் புரண்டு மகிழ்வாய்,
அது பகல் பொழுதுக்கு மாலை மறையும் தருணம், இரவுக்கு அது அதிகாலை பொழுது ;
அடுத்த வீட்டு திண்ணையில் தோழிகளுடன் அம்மாவின் அரட்டை துவங்கும்,
நீ,
பாது காவலன் போல் அருகே அமர்ந்திருப்பாய் ஆரவாரமின்றி,
வீடு வரை அம்மாவை வழி அனுப்பி வைத்து விட்டு, வேட்டைக்கு செல்வாய்.
ஓர் நாள் உன் அன்புக் குரல் கேட்கவில்லை; என் உறக்கம் களைய வில்லை,
என் உயிர் மட்டும் உணர்ந்திருந்தது,
"உன் உயிர் நேற்றே பிரிந்து விட்டது;
மகிழ்ச்சி தனது ஒரு வார விடுமுறை விண்ணப்பத்தை என்னிடம் விட்டு சென்றது"
என்று!!
Sunday, April 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment